Searching...
Thursday, April 26, 2012

அ‌ஜீத்தால் முடியாதது விஜய் சாதிப்பாரா?


டைட்டிலைப் பார்த்து ஏதாவது ஃபைட்டா என்று பதறியிருப்பீர்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சிம்‌ப்பிள் மேட்டர்.

தனது பிறந்தநாளின் போது தான் நடித்தப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் அ‌ஜீத். நிக் ஆர்ட்ஸை விலக்கியப் பிறகு அந்த நடைமுறையில் சறுக்கல். இந்தமுறை அதனை ச‌ரி செய்யலாம், பில்லா 2 வை தனது பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிட்டிருந்தார். பட வேலைகள் முடியாததால் அ‌ஜீத்தால் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. ஜூன் முதல் வாரம்தான் பில்லா 2 திரைக்கு வரும் என‌ தெ‌ரிகிறது.

இந்நிலையில் துப்பாக்கிப் படத்தை ஜூன் 22ஆம் தேதி வெளியிட விருப்பமாக இருக்கிறார் விஜய். ஜூன் 22 அவரது பிறந்தநாள்.

துப்பாக்கியில் இன்னும் இரு பாடல் காட்சிகள்தான் பாக்கி. தாய்லாந்தில் அதனை‌ப் படமாக்க இருக்கிறார்கள். பாடல் காட்சிகள் முடிந்தால் போஸ்ட் புரொடக்சன் வேலைகள். ஜூன் 22 படத்தை கண்டிப்பாக வெளியிட வாய்ப்புள்ளது.

ஜூன் 22 விஜய் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷமாக இருக்கப் போகிறது.

1 comments:

  1. அருமையான பதிவு

    மே தின வாழ்த்துகள்
    உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To get the Vote Button
    தமிழ் போஸ்ட் Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete

 
Back to top!