ஷங்கர் இயக்கத்தில் வந்த இந்தியன் படம் பரபரப்பாக ஓடியது. இதில் கமல் இரு வேடங்களில் நடித்து இருந்தார். குறிப்பாக இந்தியன் தாத்தா வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
விபத்தில் உயிர் தப்பி வெளிநாட்டில் கம்பீரமாக நடந்து செல்லும் கிளைமாக்ஸ் காட்சி கை தட்ட வைத்தது. ஊழலுக்கு எதிரான இப்படத்தின் கதை அன்னா ஹசாரே, ராம்தேவ் போராட்டம் நடத்தி வரும் இக்காலக் கட்டத்துக்கு மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது. எனவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன் பார்ட் 2 என்ற பெயரில் எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்தியன் படத்தை தயாரித்தவர் ஏ.எம். ரத்னம் என்பதால் அதன் இரண்டாம் பாகத்தையும் அவரே தயாரிக்கிறார். இப்படத்தில் கமலுக்கு பதில் அஜீத் நடிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது. மங்காத்தாவில் அஜீத்தின் இளம்நரை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. அதே கெட்டப்பில் இந்தியன் பார்ட் 2 படத்தில் அஜீத் நடிப்பார் என கூறப்படுகிறது.
தகவலுக்கு நன்றி....
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteHot tamil actresses
தொடர்ந்து ... உங்கள் கருத்தை ... வரவேற்கிறோம் .....
ReplyDelete