Searching...
Sunday, March 16, 2014

என் கொங்கு நாட்டு நாட்டுப்புறப் பாடல்... ( நாத்து நடவுப் பாடல்)

நாத்து நடவ நட்டு வாங்க நல்ல நேரம் பாத்து.......
சேத்து மேல நட்ட நடவ வீசித் தள்ளுது காத்து...
ஒரு பூமி நமக்கிருக்கு.. அதப் போற்றி நடந்திடலாம்....
ஒரு ஏருங்கலப்பையுமே போதும் நாம ஜெயிச்சிடலாம்...
நாத்து நடவ நட்டு வாங்க நல்ல நேரம் பாத்து.......
சேத்து மேல நட்ட நடவ வீசித் தள்ளுது காத்து...
கூழோட மெளகா பலகாரம்...
சுடுசோறு கெடைக்கும் சில நேரம்....
மேற்கால பொழுது சாஞ்சாலே....
மெதுவாக மனசு கரையேறும்...
ஆலமரம் குயில்களும் பாடுதைய்யா...
கேட்டதுமே எங்க துயில் தீருதைய்யா....
நம்ம சின்னமல பேரச் சொல்லி பாட்டுக் கட்டி மனம் பாடுது பாடுது..
நாத்து நடவ நட்டு வாங்க நல்ல நேரம் பாத்து.......
சேத்து மேல நட்ட நடவ வீசித் தள்ளுது காத்து...
கால் காணி நெலமே உயிராகும்...
சம்சாரி வேர்வ பயிராகும்....
வயலோர வேப்ப மரமாடும்...
அதப் பாத்து எங்க மனசாறும்...
வானவில்லத் தொட்டுவர ஆசையில்ல...
வாழ்க்கையில கோடிப் பணம் தேவையில்ல....
உயிர் உள்ளவர கையும் காலுமாகக் காலம் தள்ளிடனும்...
நாத்து நடவ நட்டு வாங்க நல்ல நேரம் பாத்து.......
சேத்து மேல நட்ட நடவ வீசித் தள்ளுது காத்து...
ஒரு பூமி நமக்கிருக்கு.. அத போற்றி நடந்திடலாம்....
ஒரு ஏருங்கலப்பையுமே போதும் நாம ஜெயிச்சிடலாம்...
நாத்து நடவ நட்டு வாங்க நல்ல நேரம் பாத்து.......
சேத்து மேல நட்ட நடவ வீசித் தள்ளுது காத்து...

0 comments:

Post a Comment

Back to top!