Searching...
Sunday, March 9, 2014

அம்மான்னா சும்மா இல்லடா..

ஊரார், உறவுகளை பொருத்தவரை பெரிதாய் ஒன்று அவள் சாதிக்க வில்லை. 

எனக்கு மட்டும் ஏனோ அவள் அதிகம் சாதித்தவளாக தெரிகிறாள். 

தனக்கு பிடித்தவை அனைத்தையும் விட்டுக்கொடுத்தாள் உறவுகளுக்காக. 

ஊருக்கே விருந்து வைத்து விட்டு உணவருந்தாமல் உறங்கினாள்.

பண்டிகை நாட்களில் கூட புத்தாடை அணிந்ததில்லை, அடுக்களையிலேயே சமைத்துக்கொண்டிருப்பதாள்.

என் பிறந்தநாள் அன்று பிடித்ததை சமைத்து கொடுப்பாள், ஆனால் அவள் பிறந்தநாளை நான் மறந்தே போய்விடுவேன். அதை பற்றி பெரிதாகவும் எடுத்துக்கொள்ள மாட்டாள்.

என்னை சுகமாய் பெற்றெடுக்க பல நாள் தூக்கம் தொலைத்தாள்.

நூறு மடங்கு வலியை அனுபவித்து என்னை பெற்றெடுத்தாள். இத்தனை வலிகளை தாண்டித்தான் உன்னை பெற்றெடுத்தேன் என்று ஒருபோதும் சொல்லியதில்லை.

நான் செய்த தவறுக்கு மற்றவரிடம் திட்டுக்கள் வாங்கினாள்.

நல்ல விதமாகவே என்னை அவள் வளர்த்தாலும் என்ன பிள்ளை வளத்தியோ என்று அனைவரும் மிக எளிதாய் அவளை குற்றம் சொல்லி விடுவார்கள்.

எத்தனை விடுமுறை நாட்கள் வந்தாலும் அவளுக்கு மட்டும் விடுமுறையே கிடைப்பதில்லை அவள் பார்க்கும் வேலைகளில் இருந்து.

21 வயதில் நான் கல்லூரி படிப்பை முடித்தேன், அவளோ என்னையும் என் சகோதரனையும் பெற்றேத்து முடித்தாள் தன் படிப்பை தியாகம் செய்து.

அவள் என்னை பற்றி கண்ட அனைத்து கனவுகளும் பலித்தது அவள் பற்றிய கனவுகளை தவிர்த்து.

சம்பளம் இல்லா வேலைக்காரி என்பார்கள் கேலியாக, நான் பிறக்கும் முன்பே என் அன்பை சம்பாரித்தவள் அவள் தான்.

இந்த மகளிர் தினத்தை என் அன்னை அவளுக்காக சமர்பிக்கிறேன். 

0 comments:

Post a Comment

 
Back to top!