Searching...
Friday, March 14, 2014

எச்ஐவி ரத்தத்தை மாணவனுக்கு செலுத்திய பயங்கரம்:



எச்ஐவி ரத்தத்தை மாணவனுக்கு செலுத்திய பயங்கரம்: கோவை கே.ஜி.மருத்துவமனையின் அலட்சியம்!

கோவை கே.ஜி.மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவனுக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று ஏற்பட்டதாகக் கூறி மாணவனின் உறவினர்கள் கோவையில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உதகை, அறுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது 16 வயது மகன் மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அந்த மாணவன், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி.மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக வேலூர் சென்றபோது, மாணவனின் ரத்தத்தில் எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாம். இதற்கு, கோவை தனியார் மருத்துவமனையில் மாணவன் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு எய்ட்ஸ் நோய் பாதித்தவரின் ரத்தம் செலுத்தப்பட்டதே காரணம் எனக் கூறி மாணவரின் உறவினர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி.மருத்துவமனை எதிரில் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் விரைந்து வந்து மாணவனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

0 comments:

Post a Comment

 
Back to top!