Searching...
Sunday, March 16, 2014

படித்ததில் ரசித்தது:

ஒரு நாள் இளைஞன் ஒருவன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு பெரியவர் வெயில் தாக்குப் பிடிக்க முடியாமல் தலை கிறுகிறுத்து நடு வீதியில் விழுந்து துடிதுடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே மனம் வருந்தியவனாக, "கடவுளே.. உன் மனசு என்ன கல்லா? இதை எல்லாம் பார்த்துக் கொண்டே நீ சும்மா இருக்கிறாயே! உனக்கு கண் இல்லையா? " என்று அழுதான் அந்த இளைஞன். 

அதற்குக் கடவுள் சொன்னார், " அட.. மூடனே.. இவனுக்கு உதவி செய்வதற்கு தானே உன்னை இந்த நேரத்தில் இந்த இடத்திற்கு அனுப்பியிருக்கிறேன்"..

இருட்டை சபிப்பதை விட ஒரு சின்ன மெழுகுவத்தியை ஏற்றி வைப்பது சிறந்தது.

0 comments:

Post a Comment

 
Back to top!