உடல் உறுப்புகள் பாதித்த நிலையில் மற்றவர்களிடம் இருந்து தானம் பெற்று அவை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. ஆனால் அவற்றுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அவற்றை பரிசோதனை கூடங்களில் உருவாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது முதன் முறையாக மனித நுரையீரலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். விபத்தில் பலியான 2 குழந்தைகளின் நுரையீரலை அகற்றி அவற்றை மற்றொருவர் உடலில் பொருத்த டெக்சாஸ் மருத்துவ பல்கலைக்கழக நிபுணர்கள் ஏற்பாடு செய்தனர்.
ஆனால் அவை மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தன. ஆனால் அவற்றின் சில தசைகள் மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருந்தன. எனவே, அவற்றை சேகரித்து பரிசோதனை கூடத்தில் வளர்த்து நுரையீரலை உருவாக்கினர்.
இதை மனிதர்களுக்கு பொருத்துவதற்கு முன்பு பன்றிகளின் உடலில் வைத்து பரிசோதிக்கப்பட உள்ளது. அது வெற்றி பெற்ற பிறகு மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் என ஆய்வில் ஈடுபட்ட நிபுணர் டாக்டர் நிகோலஸ் தெரிவித்துள்ளார்.
இது நல்ல முறையில் செயல் பட்டால் 1600 பேருக்கு இம்முறையில் உருவாக்கப்பட்ட நுரையீரலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment