Searching...
Sunday, March 2, 2014

கடவுள் இருக்கிறாரா ?இல்லையா ?



ஒரு ஆஸ்திகர் பல கோயில்களையே கட்டினார். ஆனால் அவருக்கு இறுதியில் ஒரு சந்தேகம் வந்தது. கடவுள் உண்மையிலே இருக்கிறானா இல்லாவிட்டால் என் வாழ்கையே வீண்ணாக்கி விட்டேனா என்ற சந்தேகம். ஒரு நாள் அதிகாலை புத்தரை காண அந்த ஆஸ்திகர் வந்தார். புத்தரிடம் கேட்டார், "கடவுள் இருக்கிறா?" என்று. புத்தரிடம் கடவுள் இருக்கிறாரா பலர் கேட்டபோது பதில் கூறுவது இல்லை மெளனமாக இருந்து விடுவார். ஆனால் இந்த ஆஸ்திகர் கேட்ட கேள்விக்கு, "கடவுள் இல்லை!" என பதில் கூறினார். சிஷ்யர்களும் மகிழ்ந்தனர் கடவுள் இல்லை என நிம்மதி அடைந்தனர்.

அன்று மாலைநேரம் ஒரு நாஸ்திகர் வந்தார். அவர் பல ஆஸ்திகரையே நாஸ்திகராக்கிய நாஸ்திகர். அவர் மரணம் அடையும் காலம் வந்தது. அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. கடவுள் உண்மையில் இருந்தால் என் வாழ்கையே வீண்ணாக்கி விட்டேனா என்ற சந்தேகம் வந்தது. அவர் புத்தரிடம் கேட்டார் கடவுள் இருக்கிறா என்று. "புத்தர் கடவுள் இருக்கிறார்!" என்றார். புத்தரின் இந்த பதிலால் சிஷ்யர்களும் குழப்பம் அடைந்தனர்.

புத்தர் ஏன் இப்படி கூறினார் என்று உங்களுக்கும் குழப்பமாக இருக்கும். ஏன் அப்படி கூறினார் என்றால் இந்த ஆஸ்திகரும் நாஸ்திகரும் தாங்கள் சுயமாக தேடி கடவுளை அறியவில்லை. அடுத்தவர் நம்பிக்கையில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கு அந்த சந்தேகம் அடிமனதில் ஒளிந்து இருந்து இருக்காது. உண்மையில் எமக்கு கடவுள் இருக்கிறானா இல்லையா என்பது தெரியாததே உண்மை. எமக்கு அந்த தேடல் இருந்தால் புத்தர் விவேகானந்தரை போல் தேடி உணர்ந்தாலே முழுமையான பூரணத்தெளிவு அடைவோம்.

0 comments:

Post a Comment

 
Back to top!