“சொந்த வீடு” குடி புகுந்து,
தங்கையை புகுந்த வீடேற்றி,
காதல் பருவம் கனலேற்றி,
அப்பன் வாங்கிய கடனையெல்லாம்
குட்டியுடன் சேர்த்து கட்டிய பின்னே,
“பெண் தேடும் படலம்” அறங்கேறிற்று.
“படலம்” என்று நினைத்தே இருந்தேன்
“படலங்கள்” அன்றோ நடந்தேறிற்று
“ஜாதகத்தின்”
தட்டச்சு எழுத்து மறைந்தே விட்டது
தடவிய மஞ்சள் உதிர்ந்தே போனது
ஏழில் செவ்வாய் என்பார்...
இரண்டில் கேது என்பார்...
அத்தனை பொருத்தமும்
சேர்ந்த பின்னே,
“எண்ணாயிரம்” சம்பளம் போதவில்லை என்பார்
“இருமடங்காய்” ஊதியம்
உயர்ந்த பின்னே,
மாப்பிள்ளை
“முதிர்ச்சியாய்”
தெரிகிறார் என்பார்.
முதிர்ச்சியெல்லாம் மறைக்க முற்பட்டும்
“இரட்டை முதுகலைப் பட்டம்” கேட்பின்!!!
இருக்கும் “இரு மயிரும் “
உதிர்ந்தே போகும்.
ம் ம் ம் ...
ஒருவேளை..
முற்பகலில்
ராமனைத்தேடிய
“முதிற்கன்னிகளின்” சாபங்களோ?!!
இல்லை
அக்னி பரிட்ச்சை எழுதிய
“சீதையின்” சாபங்களோ?!!
இன்னும் எரியவில்லை
“எங்கள் வீட்டு விளக்குகள் மட்டும்” !!!
தங்கையை புகுந்த வீடேற்றி,
காதல் பருவம் கனலேற்றி,
அப்பன் வாங்கிய கடனையெல்லாம்
குட்டியுடன் சேர்த்து கட்டிய பின்னே,
“பெண் தேடும் படலம்” அறங்கேறிற்று.
“படலம்” என்று நினைத்தே இருந்தேன்
“படலங்கள்” அன்றோ நடந்தேறிற்று
“ஜாதகத்தின்”
தட்டச்சு எழுத்து மறைந்தே விட்டது
தடவிய மஞ்சள் உதிர்ந்தே போனது
ஏழில் செவ்வாய் என்பார்...
இரண்டில் கேது என்பார்...
அத்தனை பொருத்தமும்
சேர்ந்த பின்னே,
“எண்ணாயிரம்” சம்பளம் போதவில்லை என்பார்
“இருமடங்காய்” ஊதியம்
உயர்ந்த பின்னே,
மாப்பிள்ளை
“முதிர்ச்சியாய்”
தெரிகிறார் என்பார்.
முதிர்ச்சியெல்லாம் மறைக்க முற்பட்டும்
“இரட்டை முதுகலைப் பட்டம்” கேட்பின்!!!
இருக்கும் “இரு மயிரும் “
உதிர்ந்தே போகும்.
ம் ம் ம் ...
ஒருவேளை..
முற்பகலில்
ராமனைத்தேடிய
“முதிற்கன்னிகளின்” சாபங்களோ?!!
இல்லை
அக்னி பரிட்ச்சை எழுதிய
“சீதையின்” சாபங்களோ?!!
இன்னும் எரியவில்லை
“எங்கள் வீட்டு விளக்குகள் மட்டும்” !!!
0 comments:
Post a Comment