''இந்தியாவின் கரங்களில் தமிழர்களின் ரத்தக்கறை'' - இப்படிப் பேசியது இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரத் துறை அமைச்சர்!........சென்னை எழும்பூரில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மனித உரிமை தினக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார் யஷ்வந்த் சின்ஹா. பி.ஜே.பி. அரசில் வெளிவிவகாரத் துறை அமைச்சராக இருந்தவர் என்பதால், அவர் பேச்சுக்கள் அனைத்தும் வரலாற்றில் பதிந்துவிட்ட ஆவணங்கள். இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருபவர்களுக்கு முக்கிய ஆதாரம் அந்தப் பேச்சு.
ராஜபக்ஷேவின் கரத்தைவிட, நமது பிரதமரின் கரங்களில் தமிழனின் ரத்தக் கறை அதிகமாகப் படிந்துள்ளது. நம்முடைய பிரதமரும் இன அழிப்புக் குற்றவாளி.
நம்முடைய தமிழர்களின் இறந்த உடலைச் சிதைத்த மாபாவத்தை செய்த காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் நீங்கள் வாக்களித்தால், நம் தமிழனின் உடலைச் சிதைத்த மாபாவத்தில் நீங்களும் பங்கெடுத்தவர்கள் ஆவீர்கள் என்று எச்சரிக்கிறேன்'' என்றார்.

0 comments:
Post a Comment