Searching...
Friday, March 14, 2014

உன் நினைவே !!!


என் கண்களில்
 உன் கண்ணீர் !
உன் உதடுகளில்
என் புன்னகை !

போய் வா என் அன்பே !!

இடம் மாறி 
போகிறோம் 
இதயங்களை
 மாற்றி கொள்ளாமல் !!

என்ன  எழுதிக்
கொடுப்பது உனக்கு
என்னையே எழுதிக்
கொடுத்த பிறகு !!

நினைவு பரிசு 
எதற்கு ?
உன் நினைவே 
எனக்கு பரிசு !!

நாம் பேசிக்கொள்ளாமல்
 இருந்த அந்த நாட்கள்
 நம்மை பற்றியே பேசிக்கொண்டு
 இருக்கிறது இப்போது!!

எந்த தருணத்திலாவது 
எதிபாராத ஏமாற்ற்ற 
சந்திப்புகள் மீண்டும் 
காணமல் போவதற்கு !!

மகிழ்ச்சியான தருனகளில்
 தனியே சிரித்துக்கொள் 
சோகம் வரும்போது மட்டும்
 மறவாமல் சொல்லி அனுப்பு !!

தூங்கி கொண்டு
 இருந்த  காதல் 
விழித்தேழுண்த போது


விடை பெரும் வேளை  !!!



0 comments:

Post a Comment

 
Back to top!