Searching...
Monday, March 10, 2014

மண்வாசனை

ஒரு நகரத்தில் போய் நமக்கு தெரியாத
முகவரியை ஒருத்தர்கிட்ட கேட்டா அவுங்க தெரிந்தால்
சொல்லுவாங்க.இல்லைனா தெரியலைன்னு தலையாட்டிட்டு போயிடுவாங்க. ஆனால் ஏதாவது ஒரு கிராமத்தில் போய் நீங்க அட்ரஸ் கேட்டு பாருங்க.தெரிந்தால் சொல்லுவாங்க.
இல்லைனா அவுங்களே அக்கம் பக்கம்
விசாரிச்சு சொல்லுவாங்க. நீங்க அட்ரஸ் கேட்கும் நபர்
அவங்களுக்கு வேண்டப்பட்டவங்களா இருந்தா அவுங்க
வீட்டில் இருக்கும் ஏதாவது சின்னப் பசங்களை வழிகாட்ட
அனுப்பி வைப்பாங்க.

அதையே நீங்க எங்க ஊர் கிழவிக்கிட்டக்கிட்ட போய் அட்ரஸ்
கேட்டீங்கன்னா நீங்க பார்க்கப் போகும் நபர் எந்த ஊர்ல
பொண்ணு எடுத்தாரு, எந்த ஊர்ல
பெண்ணை கொடுத்திருக்காரு, அவுங்க வீட்டுல
எத்தனை பேர் மிலிட்டரியில் இருக்காங்க, எத்தனைபேர்
வாத்தியார், எத்தனைபேர் வெளிநாட்டுல இருக்காங்க
என்ற தகவல்லேர்ந்து அவுங்க மூனாம்
பங்காளி வீட்டு பொண்ணு ஓடிப்போன தகவல் வரைக்கும்
சொல்லி ஒரு மினி விக்கிப்பீடியாவா உங்க
கண்ணுக்கு அந்த கிழவி தெரியும்.
சில கிழவிகள் தகவல் தறுவதில் கூகுலையும்
மிஞ்சிடுவாங்க!

‪#‎நகரத்துல‬ இருக்கிறவங்க கிட்ட அட்ரஸ் எல்லாம் கேட்க
வேணாம் உங்க பக்கத்து வீட்டுக்காரர்
பேரு என்னனு கேளுங்க பேந்த பேந்த முழிப்பாங்க!

0 comments:

Post a Comment

 
Back to top!