'சுய லாபத்துக்காக, மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றியது போதும், இனியும் அவர் பெயரை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்' என்று, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் ஸ்ரீகிருஷ்ணா குல்கர்னி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
...............ஸ்ரீகிருஷ்ணா குல்கர்னி, மகாத்மா காந்தியின் மூன்றாவது மகன் ராம்தாஸ் காந்தியின் மகள் வழிப் பேரன். இவர் ராகுலுக்கு எழுதியுள்ள கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில்...
அவர் நாதுராம் கோட்சேயால் கொல்லப்பட்டார். எத்தனையோ கமிஷன்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தும், யாருமே ஆர்.எஸ்.எஸ். தான் இதில் தொடர்பு கொண்டிருந்தது என்பதை கூறவேயில்லை. என் தாத்தா ராம்தாச் காந்தி அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில், கோட்ஸேவுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க கோரியிருந்தார். எங்கள் குடும்பமும் அதைத்தான் வற்புறுத்தியது. ஆனால், இது ஒரு தகவலுக்காக... ராம்தாஸ் காந்தி 1969ல் மும்பையில் காலமானபோது, நாதுராம் கோட்ஸேயின் இளைய சகோதரர் கோபால் கோட்ஸே அங்கே வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினார். எனவே.. இது கடந்து போன விஷயம். அதற்காக எங்கள் குடும்பம் முயன்றது...
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்... காங்கிரஸ்(இ)-ஐ உரிமையாகக் கொண்டுள்ள நீங்கள் காந்தி பெயரை உங்கள் சுயநலனுக்காக பயன்படுத்துவதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏற்கெனவே பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டு கொடுத்துள்ள தீர்ப்புகளை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
எனவே, காந்தி பெயரை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் காந்தியின் குடும்பத்தில் இருந்து வந்தவரல்லர். நீங்கள் இந்தியாவின் எத்தனையோ மக்களை காலம்காலமாக முட்டாள்களாக்குகிறீர்கள். இதை இப்போது நிறுத்துங்கள்.
0 comments:
Post a Comment