Searching...
Tuesday, March 4, 2014

சூர்யாவின் அஞ்சான் கதை ..


கமல், சூர்யா என தனது பட நிறுவனத்தின் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே போகிறது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். தற்போது லிங்குசாமி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தான் அஞ்சான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிவடைந்து, இரண்வாது மற்றும் மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார்கள் அஞ்சான் டீம்... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், மூன்றாவது கனடா, சுவிஸ், நியூசிலாந்தில் நடக்க இருக்கிறதாம்...

படத்தின் கதை தற்போது கசிந்துள்ளது... சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்யும் சூர்யா, ஒரு கருத்தரங்கிற்காக மும்பை செல்கிறார். போன இடத்தில் இவர் கண் முன்னால் ஒரு தவறு நடக்க அதை தட்டிக் கேட்கிறார். ஆனால் அங்கே இவருக்கு பிரச்சனை ஆரம்பமாகிறது. மீண்டும் சென்னைக்கு வரும் சூர்யா வேலையில் இருந்து தூக்கப்படுகிறார். அவரது குடும்பத்துக்கும் மர்ம நபர்களால் மிரட்டல்கள் வர, ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் குழம்பும் சூர்யாவுக்கு அப்போது தான் மும்மை பிரச்சனை நினைவுக்கு வருகிறது. தான் அறியாமலே மும்மை தாதாக்களின் வலையில் சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்ந்த சூர்யா, குடும்பத்தையும், சமந்தாவையும் காப்பாற்ற தாதாவாக மாறி மும்பை தாதாக்களை சந்திக்க திட்டம் போடுகிறார்... தாதாக்களிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றினாரா, இவரது காதல் என்னவாயிற்று என்பதை லிங்குசாமியின் அதிரடி ஆக்‌ஷனில் கூறப்போகிறார்கள்...

0 comments:

Post a Comment

 
Back to top!