'உத்தம வில்லன்' படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, பார்வதி மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்களாம்.
'விஸ்வரூபம் 2' படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'உத்தம வில்லன்' படத்தில் நடித்து வருகிறார் கமல். இப்படத்தின் படப்பிடிப்பு திங்கட்கிழமை முதல் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து கமலுடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்று விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்,
இணையத்தில் 'உத்தம வில்லன்' படத்தின் போஸ்டரை காப்பியடித்து விட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் கமல் போஸ்டரில் காட்டியிருப்பது 'தெய்யம்(Theyyam)' நடன வகையைச் சார்ந்தது. அந்த வகை நடனத்திற்கு இவ்வாறு தான் மேக்கப் செய்வார்கள். அனைவருமே காப்பியடித்து இருக்கிறார் என்கிறார்கள், ஆனால் தெய்யம் நடனவகை என்றால் அவ்வாறு தானே செய்ய முடியும் என்றார்கள்.
அது போலவே, இப்படத்தில் 'விஸ்வரூபம்' கூட்டணியான ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்க இருக்கிறார்கள். அவர்களோடு ஊர்வசியும் நடிக்க இருக்கிறார்.
'உத்தம வில்லன்' படத்தில் கமலுக்கு மகளாக நடிக்க இருக்கிறார் 'பூ' பார்வதி. தொடர்ச்சியாக 2 மாதங்கள் பெங்களூரில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
0 comments:
Post a Comment