Searching...
Saturday, March 1, 2014

தாத்தா...



இன்று

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை

வழக்கமாக முதியோா் இல்லத்தில்

தாத்தாவை காண

அப்பா அழைத்துப்போகும் நாள்.

அழைத்துப்போனாா்.

பள்ளி முடிதலுக்கும்

டியுசன் ஆரம்பித்தலுக்கும்

இடைப்பட்ட சொா்க்க நேரத்தில்

தெருக்கோடிக்கு அழைத்துப்போய்

விதவிதமாய் வாங்கிதரும் தாத்தா.

அம்மா

தொலைக்காட்சி தொடாில் லயித்திருக்கையில்

மடிஅமா்த்தி

தித்திக்கும் கதை தரும் தாத்தா

ஆசையாய் என் இரு கன்னங்களையும்

தடவிப்பாா்த்தாா்.

அவரால் அது மட்டுமே முடிந்தது.

முதியோா்இல்லத்தில்

மருத்துவ கவனிப்பில்லை

உணவு வசதியில்லை என

அப்பாவிடம் கண்ணீா் விட்டழுதாா்.

என்றுமே பாா்தத்தில்லை!!.

தொலைநோக்காய் முடிவெடுத்துக்கொண்டேன்.

படித்து பொியாளாகி

அப்பாவை

வசதியான முதியோா் இல்லத்தில்

சோ்ப்பதென்று!!

0 comments:

Post a Comment

 
Back to top!