Searching...
Sunday, March 23, 2014

தற்கொலை செய்துகொண்ட பிஞ்சு குழந்தை...

தேர்வுக் கட்டணம் செலுத்தாததால் அவமானப் படுத்திய பள்ளி நிர்வாகம் தற்கொலை செய்துகொண்ட பிஞ்சு குழந்தை ... 

திருவொற்றியூர்: மணலி சிபிசிஎல் நகர் 9வது தெருவை சேர்ந்தவர் மாறன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பொற்கொடி. இவர்களது மகள் பூஜா (13). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். தேர்வு கட்டணம் செலுத்த வில்லை. உடனே தேர்வு கட்டணம் செலுத்தும்படி ஆசிரியை கூறினார். இதை தந்தையிடம் பூஜா கூறினார். அவர் கூலி வந்ததும் வரும் திங்கட்கிழமை கட்டணம் செலுத்துவதாக கூறினார். இதை நேற்று பள்ளியில் பூஜா தெரிவித்தார். கட்டணம் செலுத்தாததால் பூஜாவை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. மாலையில் வீடு திரும்பியதும் இதை பெற்றோரிடம் பூஜா தெரிவித்து அழுதார். அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் தாய் பொற்கொடி பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்

இரவு திரும்பி வந்தபோது பூஜா தூக்கில் தொங்கியதை பார்த்து அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூஜாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து, பூஜா இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில் மணலி இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மகள் சாவுக்கு காரணமான அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் மாறன் புகார் செய்தார்.

அரசு என்ன செய்கிறது ?  எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் மண்ணாங்கட்டி போராளிகள் எங்கே ? ஆளுங்கட்சியை எதிர்கட்சியும், எதிர் கட்சியை ஆளுங்கட்சியும் மாறி மாறி குற்றம் சொல்லித்திரிகிறார்களே ஒழிய உருப்படியாக ஒன்றும் இல்லை . பண முதலைகள் பள்ளியை கடைத்தெருவாக்கி, கல்வியை வியாபாரமாக கருதி அப்பாவி குழந்தைகளை பலியாடக்குகிறார்கள். கல்வியை வியாபாரமாக்கும் வித்தையை அனைத்து கட்சிகளும் வேடிக்கை பார்ப்பது எனக்கு புரியவில்லை .  ஆராய்ந்து பார்த்த போதுதான் தெரிகிறது.

பாதி பள்ளிக்கூடங்கள் (கொள்ளை கூடங்கள் ) , மற்றும் கல்லூரிகள் அரசியல் வாதிகளுக்கு சொந்தமானது மீதி  அவர்களின் ஆதரவாளர்களுக்கு சொந்தமானது , ஆட்சி 5 ஆண்டுதான் பள்ளிகள் என்ற பணம் காய்ச்சி எப்போதும் காய்க்கும் என்ற தத்துவத்தை எல்லோரும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஒருவர் ஆட்சிக்கு வந்தால் மற்றொருவர்  முந்தய ஆட்சியில் போட்ட திட்டங்களை கிடப்பில் போடுகிறார்கள் , எதிர் கட்சி மீது ஊழல் குற்றம் சுமத்துகிறார்கள் ஏன்... அரஸ்ட் வரை கூட செல்கிறார்கள். கல்விக்கூடங்களுக்கு யாரும் சென்றதில்லை கல்வி என்ற போர்வையில் matriculation , CBSE, INTERNATIONAL Syllabus, என்று விதவிதமான பெயர்களை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள், கட்டணங்களும் கொஞ்ச நஞ்சமல்ல இதை அனைத்தையும் கண்டும் காணாமலும் இருக்கும் அரசியல் வாதிகளின் உண்மை முகம் என்ன ?  பள்ளிகளில் அடிக்கப்படும் கொள்ளை அனைவருக்கும் தெரியும் ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை

 கல்விக்கூடங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கிறோம் என்று கூறுகிறார்கள், அதெல்லாம் சும்மா ஒரு பெயருக்குத்தான் அரசாங்கம் கல்விக்கட்டணம் ரூல்ஸ் அது இது என்று கூறுவது உண்மையில் கட்டணத்தை குறைக்கவா? மக்களை காப்பாற்றவா? இல்லை ..!  இதுவரை எந்த பள்ளியிலாவது கட்டணத்தை குறைத்ததாக செய்தி உண்டா ?  இதெல்லாம் கண்கட்டு வித்தை அரசியல் செல்வாக்கு இருந்தால்தான் இதுபோன்ற உயர்தர பள்ளியே நடத்த முடியும், அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் அவ்வப்போது நன்கு கவனிப்பதாக செய்தி !  (சும்மா பள்ளிகூட யாவாரம் பண்ணமுடியுமா? )  இதுவரை தமிழகத்தில் எந்த பள்ளியாவது அதிக கட்டணம் வாங்கியதாக தடைசெய்யப் பட்டதா ? என்ன காரணம் எந்த பள்ளியிலும் கட்டணம் அதிகமாக வாங்குவதில்லையா? பள்ளி உரிமையாளர்களிடம் பெட்டிகள் வாங்கிக்கொண்டு பெற்றோர்களை ஏமாற்றும் அரசாங்கம் அதற்கு அனைத்து கட்சிகளும் உடந்தை இதுதான் கசப்பான உண்மை .  

நான்கு மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டியில் உள்ள கிரீன் பார்க்மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்என்.கந்தம்பாளையம் எஸ்.கே.விமெட்ரிக்குலேஷன்ஸ்கூல் ஆகிய பள்ளிகளில் நுழைந்த வருமான வரித் துறை அதிகாரிகள்பள்ளிகளில்இருந்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

பள்ளிகளில் ரெய்டு நடக்க முக்கியக் காரணமாக இருந்தவர் தமிழ்நாடு மக்கள் உரிமைஇயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மதியழகன்அவரிடம் பேசினோம். ''நாமக்கல்பள்ளிகள் என்றாலே கொத்தடிமைகளின் கூடாரம் என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்கும்தெரியும்இங்கே படிக்கும் மாணவர்கள் எந்திரங்களாகத்தான் இருக்கிறார்கள்பத்தாம்வகுப்பு ரிசல்ட் வருவதற்கு முன்பிருந்தேதமிழ்நாடு முழுக்க இருந்து பெற்றோர்கள்அட்மிஷனுக்காகக் குவிய ஆரம்பித்துவிட்டனர்பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்கள்பெற்றவர்கள் மட்டுமேஇந்தப் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்ஒருவருடத்துக்கு 1.93 லட்சம் கட்டணம் வாங்கினர்அட்மிஷன் அன்று மைக்கில், 'தயவுசெய்து 100 ரூபாய் நோட்டுக்கட்டுகளாகக் கொண்டுவராதீர்கள்எண்ணுவதற்குத்தாமதமாகிறது. 1000, 500 ரூபாய் கட்டுகள் மட்டும் கொண்டுவாருங்கள்’ என்றுஅறிவித்தனர். 480 மதிப்பெண்களுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு 2.50 லட்சம்நன்கொடை வசூலிக்கப்பட்டதுஇங்கே செலுத்தும் எந்தப் பணத்துக்கும் ரசீது கிடையாது.
இதையெல்லாம் நான் நேரில் பார்த்த பிறகுதான் வருமான வரித் துறைக்குப் புகார்செய்தேன்உடனே அதிகாரிகள் வந்தனர்அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்என் புகார்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நான் கேட்ட பிறகே இப்போது ரெய்டுநடந்துள்ளதுநாமக்கல் பள்ளிகள் பெரும்பாலும் அரசாங்கத்தையும் மக்களையும்ஏமாற்றுகிறதுநேர்மையான அதிகாரிகளைக்கொண்டுவிசாரணை நடத்தவேண்டும்என்பதுதான் என் கோரிக்கை'' என்றார்வேதனையுடன்.

ரெய்டு நடந்த பள்ளிகளில் ஒன்றான கிரீன் பார்க் மெட்ரிக்குலேஷன் 
பள்ளியின்தாளாளர்சரவணனிடம் பேசினோம். ''வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்வதுவழக்கமாக நடப்பதுதான்ஒவ்வொரு வருடமும் இப்படி அதிகாரிகள் ஆய்வுசெய்வார்கள்காய்த்த மரம்தானே கல்லடி படும்எங்கள் பள்ளியும் அப்படி பிரபலமானபள்ளியாக இருப்பதால்தான் இந்த சிக்கல் வருகிறதுஎங்களிடம் படித்த எவ்வளவோபேர் டாக்டர்களாகவும்பொறியாளர்களாகவும் இருக்கிறார்கள்அதனால்தான் ரிசல்ட்வந்ததும் எங்கள் பள்ளிகளில் கூட்டம் குவிகிறதுநாங்கள் யாரையும் கையைப் பிடித்துஇழுத்துவருவது இல்லைஎங்கள் பள்ளியில் இதுவரை ப்ளஸ் ஒன் அட்மிஷன்தொடங்கவில்லைவிண்ணப்பம் மட்டும் கொடுத்திருக்கிறோம்பிளஸ் ஒன் படிக்க,ஹாஸ்டலுக்கும் சேர்த்து 1.40 லட்சம் வாங்குகிறோம்இதில் நன்கொடை எதுவும்இல்லை'' என்று சொன்னார்.

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமாரிடம் பேசியபோது, ''அந்தப்பள்ளிகளின் சொத்து தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டுநடத்தியுள்ளனர்அதில் நாங்கள் தலையிட முடியாதுகல்விக் கட்டணம் அதிகமாகவாங்குவது பற்றி எழுத்துப்பூர்வமாக எங்களுக்குப் புகார் வந்தால்நாங்கள்ஆய்வுசெய்வோம்'' என்றார்

                                                                                                                          தொடரும் .......




0 comments:

Post a Comment

 
Back to top!