செய்முறை.....
விரிப்பில் மல்லாக்க படுக்கவும். தலை விரிப்பின் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும். துடைகளை விட்டு விலகியிருக்குமாறு கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும். உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கவேண்டும். வாயை லேசாக திறக்கவும். இப்போது நீங்கள் அமைதியான உறக்கத்திற்கு செல்லவேண்டும்.
மூச்சுக்காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும். உடல் மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்கவேண்டும். இது போன்ற சாந்தமான நிலையில் நீங்கள் எதையும் உணரமாட்டீர்கள், எதையும் கேட்கமாட்டீர்கள், புலன் உணர்வு இருக்காது மனம் ஒரு நிலையான நிலையில் இருக்கும்.

0 comments:
Post a Comment