Searching...
Monday, February 24, 2014

இதய நோய், புற்று நோயை ஏற்படுத்தும் சர்க்கரை விஷத் தன்மை வாய்ந்தது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

சர்க்கரை மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. அதை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் பருமன், இதயநோய், புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்கள் ஏற்படும். இந்த தகவலை, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் லஸ்டிக் தலைமையிலான குழுவினர் பலரிடம் நடத்திய ஆய்வில் இதை கண்டுபிடித்துள்ளனர்.  
எனவே, உலகம் முழுவதும் ஆல்கஹால், புகையிலை விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது போன்று சர்க்கரை விற்பனைக்கு கடும் சில விதிமுறைகளை உருவாக்க வேண்டும். சர்க்கரை விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Back to top!