Searching...
Sunday, February 23, 2014

சாதனையுடன் பிறந்த குழந்தை


மணிப்பூர் மாநிலம் தோபால் மாவட்டத்தில் உள்ள கக்சிங் கினோயூ கிராமத்தை சேர்ந்தவர் மைபக்ஷோ (45). பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.
அவரது மனைவி எம்.ஷெனுதேவி (37). இவர் 4–வது முறையாக கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் இம்பால் கிழக்கு பகுதியில் உள்ள ஜவகர்லால் நேரு அறிவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அது 5.9 கிலோ எடையுள்ளது. இதுவே தற்போது நாட்டில் பிறந்த குழந்தைகளில் அதிக எடை கொண்டது என்ற சாதனையை பெற்றுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2010–ம் ஆண்டில் குஜராத் மாநிலம் சூரத்தில் 5.7 கிலோ எடையில் பிறந்த குழந்தை இச்சாதனையை நிகழ்த்தியிருந்தது.
தற்போது பிறந்துள்ள 5.9 கிலோ எடையுள்ள குழந்தையின் தாய்க்கு டாக்டர் பைகோம்பா சிங் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இன்னும் சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என ஆஸ் பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 1879–ம் ஆண்டு கனடாவில் 10.8 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்தது. இதுவே உலகின் அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Back to top!