Searching...
Thursday, February 27, 2014

ராஜிவ் கொலையில் CBI மறைத்த பிரதான இரகசியம் கசிந்தது! முக்கியஸ்தர்கள் மறைவில்


கொலையாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்ததற்காக, துள்ளோ துள்ளு என்றும் துள்ளுகிற காங்கிரஸ் தோழர்கள்.
ராஜிவ் கொலை வழக்கு ஆதாரம் அடங்கிய முழு கோப்பையும் ஒரு விசாரணை அதிகாரி மலேசியாவில் தொலைத்த போது அமைதி காத்ததேன், அந்த விசாரணை அதிகாரியை பிற்பாடு சிபியையின் இணை இயக்குனராக ஆக்கிய போதும் மௌனம் காத்ததேன் ?
ராஜிவ் காந்தியின் கொலையின் போது ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு காரணத்தால், தனியார் சேனல்கள் எவற்றாலும் அன்று ராஜிவ் பங்கு கொண்ட கூட்டத்தின் நிகழ்வுகளை வீடியோ எடுக்க இயலவில்லை. ஆனால் தூர்தர்ஷனால் வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோவை “ரா” உளவு பிரிவு அதிகாரியும், பிற்பாடு “ரா” பிரிவுக்கு இயக்குனராய் பதவி ஏற்ற நாராயணன்,வீடியோவை ஆய்வு செய்துவிட்டு தருகிறேன் என்று பெற்றுக் கொண்டு, இன்று வரை அதனை சிபிஐ வசம் தரவே தராமல், தந்துவிட்டேன் என்று பொய் கதை கட்டிய போது எல்லாம் நீங்கள் எங்கே இருந்தீர்கள் தோழரே ?
ராஜிவ் கொலை வழக்கில் கைதான பெங்களூர் பாஸ்கர், சில வருடங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சந்திராசாமி தான் வெடிகுண்டு தாங்கிய பெல்டை பூஜை போட்டு தந்தார் என்று சிவராசன் கூறியதாக வாக்கு மூலம் வழங்கிய போது, சந்திரா சாமி பெயரை கூறாதே என்று வழக்கு விசாரணைக்கு தலைமை வகித்த கார்த்திகேயன் அவரை அடித்ததாக கூறினாரே, அப்போது உங்களின் நியாங்களுக்கான கொந்தளிப்புக்களை எல்லாம் எங்கே அடக்கி வைத்திருந்தீர்கள் தோழர்களே ?
ராஜிவ் கொலை குறித்து புத்தகம் எழுதிய சுப்ரமணிய சாமி, கொலையில் தொடர்ப்புடையவர்கள் ராஜிவ் காந்தியின் சொத்துக்கு வாரிசுகளாக இன்று இருக்கிறார்கள் என்றும், பெரிய பெரிய பதவிகள் வகிக்கிறார்கள் என்று எழுதிய போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் தோழர்களே ?
வேதாரண்யம் ஷண்முகம் , மிக மிக முக்கியமான சாட்சி. வேதாரண்யம் கடத்தல் புள்ளி சண்முகத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்திய சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவினர், சண்முகத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்று, ஹெலிகொப்டரில் வேதாரண்யத்துக்கு அழைத்துச் சென்றார்கள்”. அது நடந்தது, ஜூலை 19-ம் தேதி. வேதாரண்யத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் பொருட்களை அவர் காட்டிக் கொடுத்தபின், அன்றிரவு வேதாரண்யம் இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் வைத்து விசாரிக்கப்பட்டபோது, தப்பியோடினார் சண்முகம்.மறுநாள், ஜூலை 20-ம் தேதி காலையில், இன்ஸ்பெக்ஷன் பங்களா அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டு தொங்கி கொண்டிருந்தது சண்முகத்தின் உடல்!எப்படி இறந்தார் சண்முகம்? இந்தக் கேள்விக்கு இன்றுவரை சரியான பதிலை கூறவில்லை சி.பி.ஐ.
இன்னும் பல கேள்விகள் இருக்கிறது இதற்கு பதில் அளித்த பிறகு மீதம் உள்ள கேள்விகளையும் கேட்கிறேன்

2 comments:

  1. அட பாவிகளா இத்தனை கொலைகார பசக சுதந்திரமா சுத்திட்டு இருக்கனுகளா....அப்ப நம்ம நாட்டுல நீதி இல்லையா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான்

      Delete

 
Back to top!