Searching...
Saturday, February 22, 2014

நீரழிவை தடுக்கும் தயிர்

தயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புக் குறையும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 'டைப் 2' நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை 28 சதவிகிதம் குறைக்கும் சக்தி தயிருக்கு உண்டு என்பதை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். 

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் முன்னணி விஞ்ஞானியாகச் செயல்பட்டுவரும் டாக்டர் நிராபரோஹி, குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட பால் புளிப்பு பொருட்களின் (தயிர்) அனைத்து வகைகளும், 

குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் வகைகளும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பை 24 சதவிகிதம் தடுக்கின்றன என்று கண்டுபிடித்துள் உயர்ரக புரதம், வைட்டமின்கள் மற்றும் கனி மங்களுக்கு பால் பொருட்கள் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. 

ஆனால் கொழுப்புச்சத்தும் அதில் அதிகமாக இருப்பதால் உணவுக் கட்டுப்பாடுகள், மக்களை இவற்றைக் குறைவாக உபயோகிக்கும்படி தெரிவிக்கின்றன. ஆயினும் குறைந்த கொழுப்புக் கொண்ட மற்ற பால் உற்பத்திப் பொருட்களுடன் 85 சதவிகித அளவு தயாரிக்கப்படும் தயிரை ஆய்வு செய்யும்போது நீரிழிவினைத் தவிர்ப்பதற்கான அதிக அளவு வாய்ப்பு இதில் தென்பட்டுள்ளது. 

இந்த சோதனை தனியார் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளப்படும் தயிரும் நீரிழிவைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வகை முடிவுகள் சோதனைகளால் நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும், புளிக்க வைக்கப்பட்ட பால் பொருட்களில் வைட்டமின் டி, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன. மேலும் நொதித்தலின் பலனாக உருவாகும் வைட்டமின் கே, புரோபயாடிக் பாக்டீரியாக்கள், நீரிழிவு நோய்க்கு எதிரான நல்ல பலன்களைத் தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் நமது உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகள் அதிகம் கிடைக்கும்போது, தயிர் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் நமது உடலுக்கு நன்மை தரும் என்று தெரிவிக்கும் இத்தகைய ஆய்வுகள் மகிழ்ச்சியளிப்பவை என்று மருத்துவர் பரோஹி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Back to top!