Searching...
Monday, February 10, 2014

ஆம்புலன்ஸில் சென்ற மர்ம நபர்கள் யார்?


(Demo image )குறிப்பிட்ட ஆம்புலன்ஸ் படம் கிடைக்கவில்லை 
09-02-2014(ஞாயிறு) அன்று வால்பாறை புதுதோட்டம் வளைவில் 7.15 மணி அளவில் ஒரு ஆம்புலன்ஸ் -மாருதி ஓம்னி, (மாருதி ஓம்னி போன்ற பாதுகாப்பற்ற வாகனகளுக்கு எவ்வாறு பர்மிஷன் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை)  சைரன் மற்றும் நீல நிற சுழல்விளக்குடன் மிக வேகமாக சென்றுகொண்டிருந்தது. ஆம்புலன்ஸ்-நுள் யாரும் நோயாளிகள் இருப்பதாக தெரியவில்லை அருகில் விபத்து எதுவும் நடந்ததாகவும் தெரியவில்லை, , அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் முந்திக்கொண்டு மிக வேகமாக சென்றது சந்தேகத்திற்கு இடமாக இருந்தது, குறிப்பிட்ட ஆம்புலன்ஸ் பொள்ளாச்சி ரோட்டில் வேகமாக சென்று கொண்டிருந்தது ஐயர்பாடி ரோப்வே பேருந்து நிறுத்தம் மற்றும்  ஐயர்பாடி மருத்துவமனை ஆகிய இடங்களில்  நிறுத்தப்பட்டது, அதில் சில மர்ம நபர்கள் ஏறினர் மீண்டும் புறப்பட்ட ஆம்புலன்ஸ்  பொள்ளாச்சி சாலையில் மிக வேகமாக சென்று மறைந்து விட்டது. பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


வாலப்பாறை அரசு மருத்துவமனை வட்டாரங்கள் அந்த சமயத்தில் எந்த விபத்தும் நடக்கவில்லை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கின்றன, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் வால்பாறையிலிருந்து யாரும் அனுமதிக்கப் படவில்லை என தகவல் கிடைத்துள்ளது. வால்பாறை மற்றும் ஆழியாறு காவல்துறையிலும் விபத்து எதுவும் பதிவானதாக தகவல்கள் இல்லை.

அவ்வாறு விபத்துக்கள் ஏற்படாத சமயத்தில் சுழல்விளக்குடன் சென்ற ஆம்புலன்ஸ் எது? அந்த வாகனம் உண்மையான ஆம்புலன்ஸ்தானா? அந்த ஆம்புலன்ஸ்ல் சென்ற மர்ம நபர்கள் யார் ? தீவிரவாதிகளா? அல்லது எதேனும் தீய செயல்களுக்கு ஆம்புலன்ஸ் பயன்படுத்தப் படுகிறதா? 

ஆம்புலன்ஸ் டிரைவர் பணத்திற்காக பயணிகளை ஏற்றி சென்றிருக்கக் கூடும் அல்லது ஆம்புலன்ஸை யாரும் வழிமறிப்பதில்லை என்ற காரணாத்தினால் எதேனும் தீய செயல்களுக்கு பயன்படுத்தப்படலாம். போகிற போக்கைப்பார்த்தால் ஆம்புலன்ஸ்களையும் சோதனை செய்யவேண்டி வரலாம்...........

0 comments:

Post a Comment

 
Back to top!