Searching...
Friday, February 28, 2014

டெங்குவை போக்கும் எளிய தமிழ் மருத்துவம்!



''சித்த மருத்துவம் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்று சொல்லும்'' சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் சிவராமன், 


''நிலவேம்புக் குடிநீர் (தூள்), ஆடாதொடை இலை (adhatoda vasica leaf) குடிநீர் (தூள்) ஆகியவை சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். காலை உணவுக்கு முன்பு நிலவேம்புக் குடிநீர் (தூள்) 2 டீ ஸ்பூனை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிப்பது நல்லது. இரவு உணவுக்கு முன்பு ஆடாதொடை இலை குடிநீர் (தூள்) 2 டீ ஸ்பூனை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு இப்படி குடிப்பது பலன் அளிக்கும். ஆடாதொடை இலையை அப்படியே அரைத்து சட்னி போல் சாப்பிடுவதும் நிவாரணம் அளிக்கும்.

வீட்டில் வேறு யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், ஆரோக்கியமாக உள்ளவர்கள்கூட காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்ள இந்த மூலிகை கஷாயங்களைச் சாப்பிடுவது நல்லது. குணம் அடைந்த பிறகும்கூட நான்கு நாள்கள் கஷாயத்தைச் சாப்பிட வேண்டும்'' என்கிறார் சிவராமன்


நிலவேம்பு பயன்கள்

ஜுரம், வீக்கம் (அழற்சி), ஜலதோஷம் இவற்றுக்கு 'ஆஸ்பிரின்' மருந்து போல நிலவேம்பு செயல்படுகிறது. 15 கிராம் நிலவேம்பு + கிச்சிலித்தோல் 195 மி.கி. + கொத்துமல்லி 195 மி.கி இவற்றை வெந்நீரில் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து, பிறகு வடிகட்டி, 15 - 30 மி.லி. வரை தினமும் 2 - 3 வேளை கொடுக்கலாம். நிலவேம்பின் ஜுரம் குறைக்கும் திறன், ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. ஒரு கிலோ உடல் எடைக்கு 300 மி.கி. நிலவேம்பில் உள்ள கசப்பு ரசாயனப் பொருள் கொடுத்து வந்ததில் அது அதே அளவு 'ஆஸ்பிரின்' மருந்து போல் செயல்படுகிறது. மூக்கடைப்பு, தொண்டைப்புண், காதுவலி, தலைவலி, இவற்றுக்கும் நிலவேம்பிலிருந்து எடுக்கப்பட்ட கசப்புப் பொருள் மருந்தாகிறது. உடல் அழற்சி, இரணங்களையும் ஆற்றுகிறது.

நிலவேம்பு சாறு அல்சருக்கும் நல்ல மருந்து. குடலில் அதிக அமிலச் சுரப்பை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். பேதியை நிறுத்தும் திறனுடையது. லோபர் மைட் (அ) லோபோமை (Loperamide) என்ற அலோபதி பேதி மருந்து அனைவருக்கும் தெரிந்த மருந்து. நிலவேம்பின் இராசாயனப் பொருட்கள் இந்த மருந்துக்கு இணையாக செயலாற்றி பேதியை நிறுத்துகிறது. நாள்பட்ட பெருங்குடல் அழற்சிக்கு நல்ல மருந்தாகும்.

கல்லீரலை காக்கும் மருந்துகளில் ஒன்று நிலவேம்பு. கல்லீரல் கோளாறுகளுக்கு உள்ள ஆயுர்வேத மருந்துகளில், 26 மருந்துகளில் நிலவேம்பு சேர்க்கப்படுகிறது. மது அருந்துதல், நச்சுப் பொருட்கள் இவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுவது எதிர்க்கிறது. பித்த நீர் சுரப்பை அதிகப்படுத்தும்.



நிலவேம்பு பேக்டீரியா, வைரஸ் இவற்றுக்கு எதிரி. யானைக்கால் வியாதிகளை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும். உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தின் வெள்ளையணுக்களின் திறனை மேம்படுத்தும்.

0 comments:

Post a Comment

 
Back to top!